2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்

Editorial   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றனீஸ், அ.அச்சுதன், ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை, திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்து சமயத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன், உத்தியோகபூர்வமாக இன்று (07) ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாடிகோராள மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான டி.எம்.எல்.பண்டாரநாயக்க, இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டச் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X