Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவலடி பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவலடி, ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர் நீர்கொண்ட மட்டக்களப்பு வாவியாலும் சூழப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.
எனவே, மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில், குடிநீர் விநியோகத்திட்டம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபையின் உதவியுடன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதற்கான நடவடிக்கைகளை இன்று (25) ஆரம்பித்தது.
இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
17 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
33 minute ago