Editorial / 2022 நவம்பர் 23 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
கடும் குளிர் காரணமாக தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர் தீப்பரவி உயிரிழந்துள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் சட்டி ஒன்றில் தேங்காய் மட்டைகளை கொண்டு தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த போது அப் பெண்ணின் உடலில் தீ பரவியுள்ளது.
இவ்வாறு தீ காயங்களுக்குள்ளான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026