2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

Freelancer   / 2021 ஜூன் 10 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன் )

மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து 4 வயது சிறுவன் ஒருவனை, இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த முகமட் ஹாபீர் என்ற 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக  சிறுவனின் 42 வயதுடைய தந்தையாரை சந்தேகத்தில், இன்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சம்பவத் தினமான, நேற்றிரவு 11 மணியளவில் காணாமல் போயுள்ளதாகவும், நீண்ட நேரம் தேடிப்பார்த்த நிலையில், கிணற்றில் உயிரிழந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை  சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

M
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .