2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சட்டவிரோத மண் அகழ்வு; மூவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி  

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு சந்தேகநபர்கள், இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வன திணைக்களத்துக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த இருவரே, வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகளின் விசேட சுற்றிவளைப்பயடுத்து  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு - காலபோட்டமடு எனுமிடத்தில், அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவு இயந்திரத்தைத் தாம் கைப்பற்றி, அதன் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக, வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .