Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 26 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான 12 வெற்றிடங்கள், கிழக்கு மாகாணம் முழுதும் நிலவுகின்றனவென, மாகாண சமூக சேவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, வெருகல், கோமரங்கடவல, மொரவெவ பிரதேச செயலகங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை ஓட்டமாவடி, காத்தான்குடி பிரதேச செயலகங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், மகாஓயா உள்ளிட்ட பிரதேசங்களிலும் மொத்தமாக 12 வெற்றிடங்கள் நிலவுகின்றனவென, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இது தொடர்பான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கான கல்வித் தகைமையாக குறித்த துறையில் பட்டதாரிப் பட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் இது தவிர ஏனைய திணைக்களங்களிலும் பல வெற்றிடங்கள் நிலவுகிறது ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு கோர வேண்டும் என வேலையில்லா பட்டதாரிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.
துறை சார்ந்த பட்டங்களை கொண்ட பட்டதாரிகளுக்கு குறித்த நியமனங்களை வழங்குமாறும் இதற்காக கிழக்கு ஆளுநர் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது
எனவே, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
14 minute ago
33 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
48 minute ago
1 hours ago