Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை இடம்பெற்ற பகுதியில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின் பின் மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்படுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுக்கள், மோப்ப நாய்கள் கசிதம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கொலை நடைபெற்ற வீட்டுக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து உடைந்த நிலையில் கோடாரி ஒன்றிணையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த இரட்டைக்கொலை தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் நடைபெற்றுவருவதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) இரவு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
24 minute ago
41 minute ago