Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 14 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாணத்தில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியலாயம், இன்று வெள்ளிக்கிழமை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம்.நசீர், கே.துரைராஜசிங்கம் மற்றும் பிரதி அவைத் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக்,
மா.நடராஜா, கே.கருணாகரன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆர்.ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் உபதலைவர் சர்ஜூன் அபூபக்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தை இலங்கை சுற்றுலாத்துறையின் கேந்திர முக்கியத்துவமிக்க இடமாக மாற்றியமைப்பதே, கிழக்கு முதலமைச்சரின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களில் காணப்படும் சுற்றுலா முக்கியத்துவம்வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்தி, அவற்றை அபிவிருத்திச் செய்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்திலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில், இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது கிழக்கு சுற்றுலாசார் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான அலுவலகமாகவும் செயற்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
39 minute ago
48 minute ago
52 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
52 minute ago
56 minute ago