Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஜூலை 25 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான இரா.துரைரத்தின், “செய்திகளின் மறுபக்கம்” எனும் நூல் வெளியீட்டு விழா, மட்டக்களப்பு, கல்லடி கல்வி அபிவிருத்தி சபை மண்டபத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கமும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கமும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூல் வெளியீட்டுரையை மண்முனை வடக்கு முன்னாள் கோட்ட கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரனும் விமர்சன உரைகளை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஓய்வுநிலை கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும் ஊடக ஆய்வாளருமான எஸ்.மோசேஸ் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இதேவேளை, இந்த நூல் அறிமுக விழா, கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் ஓகஸ்ட் 4ஆம் திகதி மாலை 5மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சிலோன்ரூடே பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான அனந்த பாலகிட்ணர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவுக்கு, இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
2 hours ago