Editorial / 2020 ஜூன் 16 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்திலும் பார்க்க சற்று குறைவடைந்துள்ள நிலையில், நுளம்புகள் பெருவதற்கு இனியும் இடங்கொடுக்காத வகையில், சுற்றுச்சூழலை துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் 10 பேரே டெங்குத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில், டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
17 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
33 minute ago