2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

டெங்குவைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வுப் பேரணி

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாங்கள், டெங்கு பற்றி அறிந்து கொள்வோம் - ஒழிப்பதில் பங்களிப்போம் - இது எங்கள் கடமையும் பொறுப்புமாகும்” எனும் தொனிப்பொருளில், டெங்குப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவத்கான விழிப்புணர்வுப் பேரணியொன்று, செங்கலடி நகரில் இன்று (01) நடைபெற்றது.

செங்கலடி மெதடிஸ்த பாலர் பாடசாலை முன்றலில் ஆரம்பமான பேரணி, செங்கலடி முச்சந்திவரை சென்று, மணீடு பாலர் பாடசாலையை வந்தடைந்தது. 

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலம், செங்கலடி மெதடிஸ்த பாலர் பாடசாலை ஆகியன இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பாலர் பாடசாலை மாணவர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

டெங்குக் காய்ச்சலின் போது உட்கொள்ளக் கூடிய உணவு மற்றும் பராமரிப்பு, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தல், டெங்குக் காய்ச்சலிலிருந்து பாதுகாத்தல், டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள், டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழித்தல் போன்ற விடயங்களை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களும், இதன்போது விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X