2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

டெங்கு பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், சகா

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு அரச திணைக்களங்கள், அரச சாரபற்ற திணைக்களங்களின் ஒத்துழைப்புடன், கடுமையான நடவடிக்கையில் இறங்குவதற்கு மாவட்ட டெங்கொழிப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

மாவட்ட டெங்கொழிப்பு செயலணியின் மீளாய்வு விசேட கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பங்களிப்புடன், அக்குழுவின் தலைவியும் மாவட்டச் செயலாளருமாக திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்றது.

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதால், பாடசாலைகளில் டெங்கு பரவாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும் இதற்கான நடவடிக்கையில் பாடசாலை சார்ந்த நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்திலுள்ள அரச அலுகங்களில் டெங்குத் தடுப்புக்கான பொறுப்புகளை அந்தந்த அரச தலைவர்கள் ஏற்க வேண்டுமெனவும் சகல அரச அலுவலகங்களும் பாடசாலைகளும் வாரத்தில் அரை நாளை, டெங்கொழிப்பு  பணிகளுக்கு ஒதுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, அம்பாறை - காரைதீவுப் பிரதேசத்தில் டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துமுகமாக, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (12)  செயற்பாட்டுக் குழுக் கூட்டமொன்றும் நடைபெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X