Freelancer / 2022 ஜூன் 19 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
தந்தையும், மகனும் தாக்குதலுக்குள்ளான நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடும்பத்தகராறு காரணமாக தந்தைக்கும், மகனுக்கும் ஒரு குழுவினர் இரும்புக் கம்பியால் மறைந்திருந்து தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தையும், மகனும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
55 minute ago