Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கிழக்குத் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுமிடத்து தமிழர்களின் பிரதிநிதித்துவம் கேள்ளிக்குறியாகும் சூழல் இருப்பதாகத் தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், தமிழர்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க வேண்டியது அவசியமாகுமென்றார்.
அதற்கு ஒரே கூரையில் எல்லோரும் சேர்ந்து செயற்படவேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மட்டக்களப்பு - வாவிக்கரையில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கிழக்கு மாகாணத் தமிழர்களின் நிலைபேறான ஆளுமை மிக்க அதிகாரத்தை உறுதிப்படுத்தி பயணிக்க வேண்டும். அதற்காக, கிழக்கு மாகாணத்திலுள்ள தேர்தலில் களமிறங்க இருக்கின்ற அனைத்துக் கட்சிகளையும் ஒரே கூரையின்கீழ் இணைக்க வேண்டும்.
“கிழக்கு மாகாணத்தில் ஒரு ஜக்கிய முன்னணியில் பயணிப்பதற்காக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த காலங்களில் முயற்சி மேற்கொண்டது.
“அதனடிப்படையில், எந்தச் சின்னத்தில் எவ்வாறு அமைக்கப்படுகின்ற ஒன்றினைவு தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. மிக விரைவில் இது தொடர்பில் வெளிப்படுத்தவுள்ளோம்” என்றார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago