Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், கே.எல்.ரி.யுதாஜித்
“லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள், அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்தக் கண்டம் வெடித்து சிதறிய போது, அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை. எனவே, சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி, இந்த நாட்டுக்கு வந்தேறு குடிகள்” என, தமிழரசுக் கட்சியின் செயலாளரும் வேட்பாளருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார் .
“இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு அடி நிலம் கூட சொந்தமில்லை” என, ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தைக் கண்டித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார்.
அவர் இது குறித்து கூறுகையில், “இலங்கைத்தீவு சிங்கள பௌத்த மக்களுக்குரியது என்றும் இங்கு ஆங்காங்கு தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இது அடையாளமல்ல என்று ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
“உண்மையிலே, நாங்கள் பௌத்த பிக்குகளை மதிக்கின்றோம் என்ற அடிப்படையிலே அவர் சிறந்த கல்விமானாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். ஒரு கல்விமானாக இருக்கின்ற ஒருவர் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டியவராக இருக்க வேண்டும்.
“மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற நூல்கள் பௌத்த நூல்களாக இருக்கின்றன. பௌத்தத்தை தமிழர்கள் வழிபட்டார்கள். இலக்கியம் உருவாகுவதற்கு அவர்கள் இருந்தார்கள்.
“அந்தடிப்படையில், வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற புத்த தொல்லியல் விடயங்கள் ஆதாரங்களை அது தமிழர்களுடைய பௌத்தம், தமிழ் பௌத்தர்களுடைய ஆதாரங்களாக இருக்கின்றதே தவிர, இவை எந்த வகையிலும் சிங்கள பௌத்த ஆதாரங்களாக இருக்க முடியாது.
“உண்மைகளை மூடிமறைப்பதில் எந்தவிதமான நன்மையையும் அடையப் போவதில்லை. ஆகவே, ஞானசார தேரர் தனது அறிவை இன்னும் கூர்மையாக்கித் தீட்டிப்பர்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போதுதான் உண்மை விளங்கும். இலங்கை, இங்கு வாழும் சிறுபான்மையினருக்கும் உரிய நாடே தவிர, சிங்களவர்களுக்கு தனித்துவமான நாடு அல்ல” என்றார் .
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago