ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (23) சரணடைந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான எச்.எம். அலிமுஹம்மது (வயது 60), ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பொலிஸார், ஆஜர்படுத்தியபோது, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சந்தேக நபரை பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கற்கும் சிறுவனான மாணவன், குறித்த ஆசிரியரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியிருந்தாரெனக் குறிப்பிடப்படுகிறது.
5 minute ago
17 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
22 minute ago
30 minute ago