Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 22 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்எம்,எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதைத்த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடிவடிக்கையில் ஈடுபட்ட வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,800 ஏக்கர் நெல்வயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் ந.சிவலிங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதேவேளை,திக்கோடை – தும்பாலை வீதி வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதனால் இவ்வீதி முற்றாகச் சேதடைந்துள்ளதுடன், இவ்வீதியுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
மேலும், களுமுந்தன்வெளி -நாவற்கேணி வீதி, பெரியபோரதீவு – பழுகாமம் பிரதான வீதி, மருதங்குடலை வீதி, முனைத்தீவு – பட்டாபுரம் வீதி, அம்பிளாந்துறை – தாந்தாமலை பிரதமான வீதி போன்ற பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
23 minute ago
30 minute ago