Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே, எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாமென, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக மய்யத்தில் இன்று (25) நடைபெற்ற சமகால அரசியல் நிலைமை தொடர்பிலான ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த மாத இரண்டாம் வாரத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு, ஒரு ஒப்பந்தப் படிவமொன்றையும் சமர்ப்பித்தோம்.
“தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலமா தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாம் என்ற தூரநோக்கத்துடனுமே இச்சந்திப்பை மேற்கொண்டோம்.
“நாம் புனர்வாழ்வளிக்கப்பட்டு 2016ம் ஆண்டு எமது கட்சியை ஆரம்பித்து, அதனைப் பதிவதற்குத் தேர்தல் ஆணையகத்தில் விண்ணப்பத்தை மேற்கொண்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அரசியல் ரீதியான பயணத்திலே ஈடுபட்டு வருகின்றோம். கடந்த பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தோம்.
“வெற்றியோ தோல்வியோ எமது இனத்துக்காக யுத்தம் செய்தவர்கள் நாங்கள். எனவே, நாம் அரசியலில் இருந்து ஒதுங்காது அனைத்து தேர்தல்களிலும் களமிறங்க வேண்டும் என்கின்ற விடயம் பலரால் வலியுறுத்தப்பட்டது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
01 May 2025