2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

சுற்றுலா வந்து மட்டக்களப்பு வாகரை, காயங்கேணி கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றிவந்த கொழும்பு 02, பிரேபுருக் பிளேஸைச் சேர்ந்த ஹரீஸ் டி பெர்ணான்டோ (வயது – 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் ஏழு பேர் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலாவாக மட்டக்களப்புக்கு வந்துள்ளனர். இந்நிலையிலேயே காயங்கேணிக் கடலில் நீராடியபோது இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி மூச்சு திணறியதால் ஏற்பட்ட மரணம் என பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X