Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2017 ஜூலை 31 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசு மாடுகளைச் சித்திரவதைக்குட்படுத்தும் வகையில், சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற வாகனமென்று, மட்டக்களப்பு பொலிஸாரால், இன்று (31) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. ரணதுங்க தெரிவித்தார்.
இவ்வாகனம், 3 பசு மாடுகளுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சாரதி, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், நாளை மறுதினம் புதன்கிழமை (02), ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மட்டக்களப்பு, சித்தாண்டி, சந்தனமடுஆறு பிரதேசத்திலிருந்து, சிறிய ரக லொறியொன்றில் பசு மாடுகளை ஏற்றிச் சென்ற வேளை, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாடுகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்கவில்லை என்பதுடன், மாடுகளின் நான்கு கால்களும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 May 2025
24 May 2025