2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பல்லியை சமைத்த உணவகத்துக்கு சீல்

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்ததாகக் கூறப்படும் உணவகத்துக்கு பொதுச் சுகாதார பரிசோதகள், இன்று  செவ்வாய்க்கிழமை (28) சீல் வைத்துள்ளனர்.

ஆரையம்பதி, பிரதான வீதியில் உள்ள உணவகம் ஒன்றே இவ்வாறு சீல்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில், மதிய உணவு பார்சலை வாக்கிய பெண், அந்த பார்சலை வீட்டுக்கு கொண்டுசென்று பிரித்து, சாப்பிடுவதற்கு தயாராகியுள்ளார். இதன்போதே, சாப்பாடு பொதியிலிருந்த கறிக்குள் இறந்த நிலையில் பல்லி இருந்ததை கண்டுள்ளார்.

இதுதொடர்பில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அப்பெண்  அறிவித்ததையடுத்து, பொலிஸாருடன் குறித்த உணவகத்துக்கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த உணவகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

மேலும், குறித்த உணவு விடுதி உரிமையாளருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X