2025 மே 02, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல்களில் தொழுகை ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

நாட்டிலுள்ள சகல மதஸ்தலங்களை நிபந்தனைகளோடு திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில்  பள்ளிவாசல்களில் இன்று (12) லுகர் தொழுகை நடைபெற்றது.

அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளிவாசல்களில் லுகர் தொழுகையில் தனித் தனியாக ஈடுபட்டனர்.

இதன்போது சுகாதார திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்ளுக்கமைய, தனிநபர் தொழுகைக்காக பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு, ஒரே சமயத்தில் 50 பேருக்கு குறைவானோர் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டு, தொழுகை நடைபெற்றது.

அத்தோடு, ஒவ்வொருவரும் முகக் கவசத்தை அணிந்திந்ததோடு, ஒரு மீட்டர் சமூக இடைவெளியையும் பேணும் வகையில், இறை கடமையில் ஈடுபட்டதை காண முடிந்தது.

கூட்டுத் தொழுகைக்கோ, ஜும்ஆ தொழுகைக்கோ இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதேவேளை, பள்ளிவாசல்களைத் திறப்பதற்கு முன்னர் கட்டாயம் அந்தந்த பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் அனுமதி பெற வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X