Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் அண்மைக்காலமாக நிலவிவரும் காலநிலை மாற்றத்தில் பல வீதியோர மரங்கள் முறிந்து விழுந்ததால் பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் வீதியோரங்களில் முறிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் பாரிய மரங்களை அகற்றுவதற்கான பணிப்புரையை தேசிய ரீதியில் விடுத்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவ்வாறான ஆபத்தை விளைவிக்கும் வகையில் காணப்படும் பாரிய மரங்களை அகற்றும் நடவடிக்கைகள் மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இருந்த 300 நூறு வருடங்கள் பழமை வாய்ந்த வாகை மரம் (17)திகதி செவ்வாய்க்கிழமை வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
ஏ.எச்.ஏ ஹூஸைன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
48 minute ago