Freelancer / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் கனடாவுக்கு அனுப்புவதாக 59 இலச்சத்து 35 ஆயிரம் ரூபாவை வாங்கி கொண்டு போலி விமானச்சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டுமுகவர் ஒருவரை செவ்வாய்க்கிழமை(11) கைது செய்துள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஒருவரிடம் அவரை கனடா நாட்டுக்கு அனுப்புவதாக களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் 59 இலச்சத்து 35 ஆயிரம் ரூபாவை வாங்கு கொண்டு இந்த அந்த அனுப்புவதாக இழுத்தடித்து வந்துள்ள நிலையில் கடைசியாக கனடாவிற்கான போலி விமான சீட்டை வழங்கி கனடாவிற்கு அனுப்பாது ஏமாற்றிவந்துள்ளார்.
இதேவேளை ஏமாற்றப்பட்டவர் பொலிஸாரிடம் முறைபாடு செய்ததையடுத்து 40 வயதுடைய நபர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கனகராசா சரவணன்
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago