2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பொலிஸாருக்கே கஞ்சா விற்ற நபர் கைது

Gavitha   / 2016 ஜூலை 03 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கேரள கஞ்சாவை விற்பனை செய்து வரும் இளைஞரொருவர், மாறுவேடத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சி செய்த போது, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு மாவட்டத்தில சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில்,  இந்திய கேரளக் கஞ்சாவை விற்பனை செய்து வந்த 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குறித்து, மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலையடுத்து, குறித்த பிரிவின் பொலிஸ் உத்தியோத்தர்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து வந்த நபர், அங்கு மாறுவேடத்தில் இருந்த பொலிஸாரிடமே கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 3242 மில்லிகிராம் கேரளக் கஞ்சாவை கைப்பற்றிய பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X