ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

“மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தைப் பெறும் நாம் அவர்களுக்கான சேவையை திறம்பட செய்ய வேண்டும்” என, வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார்.
மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகத்தில் செவ்வாய்கிழமை (02) நடைபெற்ற அரச சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி பெறும் நிகழ்வின் பின், உத்தியோகத்தர் மத்தியில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்புகள் எல்லேருக்கும் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை நாம் நடுநிலையாக இன, மத பாகுபாடின்றி செய்யவேண்டும்.
“கடந்த ஆண்டுகளில் நாம் திருப்தியாக செய்ய முடியாமல் போன அலுவலக காரியங்களையும், மக்களுக்கான சேவையையும் பிறந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டில் சரிவர திருப்தியாகச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
“மக்களுக்கான சேவையை திறம்பட செய்யவேண்டும் என்பதற்காகவே, மக்களின் வரிப்பணத்திலிருந்து, அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை, அரசாங்கம் வழங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றார்.

41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago