Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 மே 23 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன், வ.திவாகரன், வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (22) மாத்திரம் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் தெரிவித்தார்.
இதன்படி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும், வாழைச்சேனை, கிரான் மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், செங்கலடி, வவுணதீவு, ஆரையம்பதி மற்றும் பட்டிப்பளை ஆகியசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 08 பேருமாக மொத்தமாக 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளைப் போணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பேணுவதுடன், முகக் கவசங்களை ஒழுங்கான முறையில் அணிந்து கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago