2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பு பொலிஸாருக்கு பெற்றோல் விநியோகம்

Freelancer   / 2022 ஜூன் 24 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஒரு வாரத்தின் பின்னர் பெற்றோல் வழங்கபப்பட்டது.

பொலிஸாருக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத்மாசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, அவர் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அரசாங்க அதிபர் ஆரையம்பதி பிரதேச செயலாளரைப் பணித்ததற்கமைய, ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாருக்கு பெற்றோல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X