Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில், இம்மாதம் 25ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எஸ். வியாழேந்திரன் தலைமையில் நிடைபெறவுள்ள இக்கூட்டத்தின் போது, மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளதோடு, கடந்தாண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள், அது தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளன.
அத்துடன், நடப்பாண்டுக்கான புதிய திட்ட முன்மொழிவுகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களும் ஆராயப்பட்டு, அதை உரிய முறையில் செயல்படுத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இம்மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்துக்கு, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகத் தவிசாளர்கள், முப்படை, பொலிஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டு, மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago