Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு சிறைச்சாலை வரலாற்றில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் சிறைச்சாலை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் அத்தியட்சகராக கடமையாற்றிய எஸ்.எல்.விஜயசேகர இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக நல்லையா பிராகரன் நியமிக்கப்பட்டுள்ளார்
2017ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றிய இவர், அதே ஆண்டில் சுப்றா கிரோட்டில் சித்தியடைந்து பதவியுயர்வு பெற்று, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றியுள்ளார்.
அதன்பின்னர் சிரேஷ்ட தரத்தைச் சேர்ந்த இவர் 2020 ஆண்டு இலங்கையில் பெரிய சிறைச்சாலையான தும்பாறை மற்றும் போகம்பர ஆகிய சிறைச்சாலைகளில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிய பின்னர் 2021இல் வவுனியா சிறைச்சாலையில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிவந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
23 minute ago
37 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
4 hours ago
4 hours ago