A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்கச்செய்யும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக் கவசம் அணிந்துசெல்லாதவர்கள் மற்றும் போக்குவரத்தில் முறையாக, சுகாதார நடைமுறைகளைப்பேணாத, போக்குவரத்து சேவைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு தலையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி தலைமையில் இந்த நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது முகக் கவசம் அணியாதவர்கள், போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களில் சுகாதார நடைமுறையை பேணாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டன.
முகக் கவசங்களை சரியாக அணியாதவர்களுக்கு அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது. இவ்வாறான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் முன்னெடுத் துள்ளனர்.
5 minute ago
7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
2 hours ago
2 hours ago