Editorial / 2020 மே 29 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில், சட்டதிட்டங்களை மீறி செயற்படும் மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசசபை ஒன்றுகூடல் மண்டபத்தில், போரதீவுப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவிச் செயலாளர் புவனேந்திரராஜா, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி பொலிஸ் அதிகாரிகள், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் உட்பட மணல் அகழ்வில் ஈடுபடுவோர், விற்பனையில் ஈடுபடுவோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மணல் அகழ்வின் போது முன்னெடுக்கப்படவேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago