Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்களை கடத்திய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, உழவு இயந்திரமும், மரத்துண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளனவெனவும், வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
முன்னதாக, ரிதிதென்னை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, தனியார் காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து வெட்டப்பட்ட 06 சுரியமாரை, 05 தேக்கு, 02 சரியமாரை மரக்குற்றிகளும் மரம் வெட்டுவதற்குப் பயன்படும் இயந்திர வாளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், புணாணை, கோறளை காட்டு பகுதியில் மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 06 தேக்கு, முதுரை, திருக்கொண்டை மரக்குற்றிகள், சிறிய ரக உழவு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 May 2025