Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஜூலை 20 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் பேண்தகு இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ், பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டதின் மரநடுகையும் விழிப்புணர்வு பேரணியும், மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட யோசப் வாஸ் வித்தியாலய ஊட்டப் பிரதேசத்திலும் நடத்தப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சுதாகரன் தலைமையில் இன்று (20) நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத் திட்டமிடலுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் வை.சி.சஜீவன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.ஜெயநாதன், தேசிய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரி திருமதி ஆர்.பாஸ்கரன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற மர நடுகையை அடுத்து பாடசாலை முன்றலில் ஆரம்பமான சுற்றாடல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, திருமலை வீதி ஊடாக, ஞாசூரியம் சதுக்கச் சந்தி, திருமலை வீதி, பொலிஸ் நிலையச் சந்தி, தோமஸ் வீதி, லொயிட்ஸ் அவனியூ ஊடாக மீண்டும் பாடசாலையை அடைந்தது.
ஜனாதிபதியால் கல்வியமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் பேண்தகு வேலைத்திட்டத்தின் கீழ் , உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம், போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டம், சிறுவர் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம், சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய வேலைத்திட்டம் ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்கள் சுயமாக தங்களுடைய வாழ்க்கை முறையை எதிர்காலத்தை முன்னெடுக்கும் வகையிலான இயலுமையை ஏற்படுத்துதலாகும்.
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இவ் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து முதல் கட்டத்தில் 27 பாடசாலைகளும், 2ஆம் கட்டத்தில் மேலும் 17 பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு, திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago