Editorial / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தற்போது அமுல்படுத்தப்படும் மின்சாரத் தடை, உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.
அச்சபையின் 47ஆவது மாதாந்த அமர்வு, நகர சபைக் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்றது.
நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது, “தற்போதைய மின்சாரத் தடை காரணமாக மாணவர்களின் கல்வி முற்று முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு 6 மணி தொடக்கம் 10 மணி வரை மாணவர்கள் மீட்டல் செய்றபாடுகளில் ஈடுபடுகின்ற நேரங்களைக் குறி வைத்து மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது. இது அவர்களது பரீட்சைப் பெறுபேறுகளில் கணிசமான அளவு பின்னடைவை ஏற்படுத்தும். அது போதாக்குறைக்கு பகல் வேளையிலும் மின்வெட்டு.
“இதனிடையே, மின்வெட்டை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் திருட்டுச் செயல்களிலும் இன்னோரன்ன சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றார்கள். இருட்டு வேளையில் போதைப் பொருள் விற்பனையாளர்கள் சுதந்திரமாக உலாவுகின்றார்கள். துஷ்பிரயோகமும் இடம்பெறுகின்றது.
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக, நகர சபையின் வருமானம், மக்களின் வாழ்வாதாரம், தொழிற்றுறைகள், கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில்தான் உள்ளன.
“சொல்லப்போனால் மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். பாரிய தொழிற்சாலைகள் தொடங்கி அடி மட்டத் தொழிலாளி வரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் வீட்டிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி துல்லியமாகப் பிரதிபலிக்கின்றது” என்றார்.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago