2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீலாதுந் நபி தின அன்னதானம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி,  மீலாதுந் நபி தினக் கொண்டாட்டம்  நடைபெறுகிறது.

இதனையொட்டி, காத்தான்குடி அப்துல் ஜவாத் அலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை  பொறுப்பு நிறுவனத்தின் கீழுள்ள மன்பஉல் ஹைறாத் பள்ளிவாசலில்  நபி புகழ் கூறும் மௌலூது வைபவம் நடைபெற்றதுடன், இன்று (18) அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த வைபவம், காத்தான்குடி அப்துல் ஜவாத் அலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை  பொறுப்பு நிறுவனத்தின் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹியின் வழிகாட்டலில், சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்றது.

அன்னதானம் வழங்கும் நிகழ்வில் மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் டி.தயானந்தனும் கலந்துகொண்டதுடன்,  பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X