Freelancer / 2022 ஜூன் 08 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
உயிரிழந்த நிலையில் 69 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வீ.சி மைதான ஓரத்தில் இருந்தே குறித்த சடலம் நேற்று (7) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் செங்கலடி - கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த பிள்ளையான் காணேசமூர்த்தி என்பர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டிலிருந்து ஆறு நாட்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றுள்ளார் என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
19 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
36 minute ago