Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 26 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ. ஆர். றுஹைம் றூமி
இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் நின்று அனைவருக்கும் சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் முதலாவது நினைவு தினம், நேற்று (25) அனுஷ்டிக்கப்பட்டது.
இவர் மறைந்தாலும் இவரது அரும்பேரும் சேவைகள் மக்கள் மனதை விட்டு மறையவில்லை.
கல்முனைப் பிரதேசத்தில் தகுதி வாய்ந்த ஒரு மார்க்க அறிஞ்ஞரின் குடும்பத்தில் பிறந்து, மார்க்க விழுமியங்களை கற்று ஒழுக்க சீலராய் உருவான மன்சூர், தன் வாழ்நாள் முழுக்க நீதி, நேர்மை, சத்தியம், உண்மை என்ற நல் ஒழுக்க மரபுகளை பின்பற்றி வாழ்ந்தார்.
சிறந்த கல்விமானான இவர், தமது சேவைக்காலத்தில் சொகுசு வாழ்க்கை எதையும் தேர்ந்து எடுக்கவில்லை என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் அவரது பழைமை வாய்ந்த வீட்டிலேயே இறுதி வரை வாழ்ந்திருந்தார் என்பதாகும்.
ஏ. ஆர் மன்சூர், கொழும்பு சட்டக் கல்லூரியில் கற்று, 1958ஆம் ஆண்டு, உயர்நீதிமன்ற அப்புகாத்தாக சத்திய பிரமாணம் செய்து கொண்ட பின் சிறந்த வழக்கறிஞ்சராகத் திகழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, 1964ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கடசியில் இணைந்து, அக்கட்சியின் செயல் குழு உறுப்பினராகவும் தொழில்பட்டு, அரசியலில் பிரகாசிக்க ஆரம்பித்தார்.
1977ம் ஆண்டு ஐக்கிய தேசிய கடசியின் அபேட்சகராக கல்முனை தொகுதியில் போட்டியிட்டு, 5,547 அதிகப் படியான வாக்குகளால் வரலாறு காணாத வெற்றியை பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் பல உயர் பதவிகளை பெற்று, ஐக்கிய தேசியக் கட்சியில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த இவர், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சி காலத்தில் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சராகவும் 1979 இல் யாழ். மாவட்ட அமைச்சராகவும், பின்னர் முல்லை மாவட்ட அமைச்சராகவும் நியமனம் பெற்று அம்மக்களுக்கும் இன, பாகுபாடற்ற சேவையாறினார்.
தமிழ் முஸ்லிம் சிங்களவர் என்ற இன விரோதங்கள் இந் நாட்டு மக்களிடையே விதைக்கப் படுமானால் இந்த நாட்டின் வளர்ச்சியையும், உயர்ச்சியையும் அது முற்றாக அழித்து விடும் என்று பல தடவைகள் பல சந்தர்ப்பங்களில் உரையாற்றியுள்ளதோடு, தன் வாழ் நாளில் அக்கொள்கையை செயற்படுத்தியும் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago