Suganthini Ratnam / 2016 ஜூன் 28 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு லேடிஸ் லயன்ஸ் கழகத்தின் நான்காவது ஆண்டின் புதிய தலைவராக திருமதி கெனடி பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு லேடிஸ் லயன்ஸ் கழகத்தின் புதிய ஆண்டுக்கான நிர்வாகம் பதவியேற்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு,உப்புக்கராச்சியில் உள்ள லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு லேடிஸ் லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவி சாந்தா ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொறியியலாளர் என்.பி.ரஞ்சன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக குழுவினர் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து புதிய தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago