2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வன வள அதிகாரி வீதி விபத்தில் பலி

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்,

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை மியான்குளம் சந்தியில் இன்று  புதன்கிழமை (29) இடம்பெற்ற விபத்தில் வனவள அதிகாரி ஒருவர் பலிகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் பெரிய நீலாவணை, மருதமுனை 5 ஐச்  சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் றவூப் (வயது 43 ) என்பவரே மரணித்துள்ளார்.

கடமையின் நிமித்தம் சக அதிகாரிகளுடன் வேவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருக்கும்போது, இவர் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதியதில் இந்த உயிரிழப்பு ஸ்தலத்திலேயே ஏற்பட்டுள்ளது.

சடலம், உடற் கூறு பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய கார் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கார்ச் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு அதிகாரி எச்.எம்.எம். அன்ஸார் தெரிவித்தார்.

இச்சம்பவம்பற்றி வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X