Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 23 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - திருமலை நெடுஞ்சாலையில் முறக்கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு (22) இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார் என்பதுடன், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளாரென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கிரான், குழாவடியைச் சேர்ந்த எம்.ஜெகன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டுக்குச் செல்வதற்காக ஓட்டோவில் வந்தவர், முறக்கொட்டாஞ்சேனை பாடசாலைக்கு முன்பாக திரும்பியபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளொன்று, ஓட்டோவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த இருவரும், சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்ட போதிலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். ஓட்டோ சாரதி, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago