Editorial / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பில் இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
பொதுத் தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கக் கோரியும் பட்டதாரிகள் நியமன வயதெல்லையை 35 மேல் உயர்த்துமாறு கோரியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காந்திபூங்கா முன்பாக ஊர்வலமாகச் சென்ற வேலையற்ற பட்டதாரிகள், மணிக்கூண்டுக் கோபுரம் ஊடாகச் சென்று, மீண்டும் காந்திபூங்காவை வந்தடைந்து, அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
நாட்டின் ஆட்சியாளர்களாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ள நிலையில், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நாட்டில் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியற்றவரா என்ற கேள்வியைத் தாம் கேட்க விரும்புவதாக, இங்கு கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago