Niroshini / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கர வண்டியும் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி சென்ற பஸ்ஸும் களுவாஞ்சிகுடியில் இருந்து மாங்காடு சென்ற முச்சக்கர வண்டியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மாங்காட்டை சேர்ந்த கே.ஜுலியன் (வயது 34), எஸ்.நிசாந்தன்(வயது 26)ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர்களை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025