2025 ஜூலை 09, புதன்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுவருகின்றது.

இதன்கீழ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வாகரை,ஆண்டான்குளம் பிரதேச மக்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை உணர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கே.குகன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்,செயலாளர் அண்ணாத்துரை உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .