2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

’அணுகுவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

விசேட தேவையுடையோர் செல்வதற்குச் சுலபமான வகையில், அரசாங்க அலுவலங்களில் அணுகுவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவிக்கையில்,'விசேட தேவையுடையோர்; சமூகத்தால் மதிக்கப்பட வேண்டும் எனும் அதேவேளை, அவர்கள் ஓரங்காட்டப்படலாகாது.

'எவரது உதவியுமின்றி விசேட தேவையுடையோர் செல்வதற்கு  ஏற்ற வகையில்,  அணுகுவழிப் பாதை அவசியமாகும்' என்றார்.  

'மேலும், போக்குவரத்து இடங்களான ரயில் மற்றும் பஸ் தரிப்பிடங்களில் படிக்கட்டுகள் சீரான ஏற்ற, இறக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன்,  அப்படிக்கட்டுகளின் இரு  கரையோரங்களிலும் கைபிடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், சக்கரக் கதிரைகளில் செல்வோருக்கு ஏற்ற வகையில் மேற்படி இடங்களில் பக்குவமான சரிவு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, இது தொடர்பில் வரைபட உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும். கட்டடங்களில்; அணுகுவழிப் பாதை வசதி; செய்யப்படுவதை உறுதிப்படு;த்த வேண்டியது அவர்களது கடமையாகும்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X