Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
நல்லதம்பி நித்தியானந்தன் / 2017 மே 31 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நல்லதம்பி நித்தியானந்தன்
இந்திய அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் 'என்னிலிருந்து எமக்கு' என்ற பயிற்சித் திட்டத்தை மூன்றாவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே இரண்டு தடவைகள் இப்பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், இரண்டாவது தடவையாக கடந்த 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை ஒரு வாரகாலத்துக்கு கருணாலயம் மண்டபத்தில் இப்பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள் மட்டத்தில் நற்பண்புகளை உருவாக்கும் நோக்கில் இப்பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களின் மனங்களிலுள்ள தீய எண்ணங்களை நீக்கி, நற்பண்புகளை உருவாக்கும் வகையில் இப்பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை இந்திய அரசாங்கம் அங்கிகரித்து அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் எனவும் அவர் கூறினார்.
எனவே, இப்பயிற்சித் திட்டத்தை எதிர்காலத்தில் இங்குள்ள பாடசாலைகள், அரசாங்கத் திணைக்களங்கள் உட்பட ஏனைய இடங்களில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago