2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் 3,000 பேரே அங்கத்துவம்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில்; சுமார் 6,571 பேர் ஓய்வூதியம் பெறுகின்றபோதிலும், அவர்களில்; 3,000 பேர் மாத்திரமே அரசாங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்; என மேற்படி நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைச் செயலாளர் பி.எம்.அப்துல் காதர் தெரிவித்தார்.

மேற்படி நிதியத்தின் பொதுச் சபைக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் செவ்வாய் (8) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'மட்டக்களப்பில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரசாங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியக் கிளைகள் இருக்கின்றன.

பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு  இந்த நிதியக் கிளைகள் இருப்பது போன்று, மாவட்ட மட்டத்திலும் அதன் மாவட்டக் கிளை இருக்கின்றது.

தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு 15 இலட்சம் ரூபாய் வரையில் வங்கிகள் கடன் வழங்குகின்றன.

இந்த நிதியத்தில்  இதுவரையில் அங்கத்தர்களாக இணையாதவர்கள், அங்கத்தவர்களாக இணைய வேண்டும்' என்றார்.  

இதன்போது அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி கிளைக்கான இவ்வாண்டுக்குரிய புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

தலைவராக கே.எம்.ஏ.அஸீஸ், செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக், பொருளாளராக எம்.வை.யூசுப், உப தலைவராக மௌலவி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி மற்றும் உப செயலாளராக எம்.ஐ.எம். இஸ்மாயில் உட்பட இரு அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X