2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'நேர்மையான பெண் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 09 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

பெண்கள் மீதான் அடக்குமுறைகளையும்  பாலியல் கொடுமைகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமாயின், நேர்மை மற்றும் பலம் மிக்க பெண் அரசியல்வாதிகள் எமது நாட்டில் உருவாக வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'பெண்களின் அரசியல் எதிர்காலம்' என்ற தலைப்பில் நிகழ்வு, மேற்படி கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை (8) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தற்போதைய இலங்கையின் சனத்தொகையில் 52 சதவீதமான பெண்கள் இருக்கின்ற நிலையில், அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளது.

2017ஆம் ஆண்டில் அரசியலில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
மேலும், பெண்கள் வட்டார ரீதியாக தேர்தலில் களம் இறங்க முன்வர வேண்டும். அவ்வாறு நீங்கள் அனைத்து வட்டாரங்களிலும் ஓர்  ஆசனம் என்றவாறு வெற்றியீட்டி, ஆசனங்களைக் கைப்பற்றினால் நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களில்; 2,450 பெண் அரசியல் உறுப்பினர்கள் வரமுடியும்.  

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் ஆகியவற்றுக்கு உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X