2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விளக்கமளிக்கும் செயலமர்வு

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

இணையத்தள செய்தியார்களுக்கான ஒழுக்க விதிகள் தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வு, இன்று  மட்டக்களப்பு வொய்ஸ் ஒவ் மீடியாவில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், இலங்கை இணையத்தள ஊடகவியலாளர் சங்கத்தன் தலைவர் பெடிகமகே, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். 

இதன்போது, இணையத்தள செய்தியார்களுக்கான ஒழுக்க விதிகள் தொடர்பான அறிமுகம், சுருக்கிய சொற்பிரயோகங்கள், கடப்பாடுகள், தகவல் மற்றும் அறிக்கைப்படுத்தல், தகவல் மற்றும் செய்திகளைச் சேகரித்தல், தவறுகளை, குறைகளை நிவர்த்தி செய்தல், மூலங்களின் நம்பகத்தன்மை, செய்தி அறிவித்தல் தொடர்பான சமூக பொறுப்புக் கூறல், தனிநபர் மற்றும் இரகசியங்கள், இணைய ஊடகவியலாளர்களின் நடத்தை, பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுதல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X