2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த பெண் பிள்ளைகள் கருத்தரிப்பு அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த பெண் பிள்ளைகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளதாகவும் இதை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு செயற் திட்டங்களை மேற்கொள்ளுமாறும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் தேசிய பெண்கள் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எம்.ஆரியரத்ன மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்கும், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கடிதமூலம் அறிவித்துள்ளார்.
 
குடும்ப சுகாதார பணியகத்தின் புள்ளி விபரங்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த பெண் பிள்ளைகள் 1226 பேர் கருத்தரித்துள்ளனர்.
 
நாட்டின் அபிவிருத்தியின் போது சுகாதார மிக்க பிரஜைகளை உருவாக்குவதில் இந்நிலை எதிர்கால பரம்பரைக்கு சவாலாக இருக்கின்றது.
 
ஆகையால் எமது சமூகம் எதிர்நோக்கும் இவ் ஆபத்தான நிலைமையை திருத்திக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறும் நோக்கில் செயற்திட்டங்களை ஒழுங்கு செய்து அவற்றை நடைமுறைப்படுத்துமாறு அக்கடிதத்தில் அவர் மேலும் கேட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X